திருச்செங்கோட்டில் தமிழ்நாடு தேக்வோண்டா அகாதெமி சார்பில் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தேக்வோண்டா அகாதெமி சார்பில் அட்வான்ஸ்  பைட்டிங் மற்றும் நடுவர்களுக்கான 2 நாள்  பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தேக்வோண்டா அகாதெமி சார்பில் அட்வான்ஸ்  பைட்டிங் மற்றும் நடுவர்களுக்கான 2 நாள்  பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் சண்டைப் பயிற்சியிலும், 42 மாணவ, மாணவியர், தேசிய நடுவர்கள் முகாமிலும் கலந்துகொண்டனர். வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளும் 11 வீரர்கள் தேர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்கள் ஆகஸ்ட் மாதம் இண்டர்நேஷனல் அளவில் நடக்க உள்ள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்வர்.
கொரியாவின் தேக்வோண்டா கிராண்ட் மாஸ்டர் லீ ஜூயோங் ஹீ கலந்துகொண்டு முகாமில் பயிற்சி அளித்தார். இதில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. கவச உடை மற்றும் தலைக் கவசங்களில் கருவிகள் பொறுத்தப்பட்டிருக்கும். சரியான வகையில் அடி விழுந்தால் தான் புள்ளிகள் கணினியில் பதிவாகி வெற்றி புள்ளிகள் திரையில் தெரியும் தலை, கழுத்து, மார்பு, கால், கணுக்கால் ஆகியவற்றில் விழும் அடிகளுக்கு ஏற்றவாறு வெற்றி புள்ளிகள் கிடைக்கும் என கொரியாவின் தேக்வோண்டா கிராண்ட் மாஸ்டர் லீ ஜூயோங் ஹீ தெரிவித்தார்.
பின்னர் முகாம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிராண்ட் மாஸ்டர் லீ ஜூயோங் ஹீ  மற்றும் தமிழ்நாடு தேக்வோண்டா அகாதெமி பொதுச் செயலர் கேசவமணி ஆகியோர் கூறியது: ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான இந்த தேக்வாண்டாவின் தலைமையிடமான கொரியாவின் குக்கிவான் சார்பில் தேசிய அளவிலான போட்டிகளுக்கான வீரர்கள் மற்றும் நடுவர்கள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்தகொண்டு வெற்றிபெற்று இண்டர் நேஷனல் அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி உடையவர்கள் ஆவர்.
திருச்செங்கோட்டில் 2 நாள்கள் நடைபெற்ற முகாமில் 11 பேர் தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையே நடக்க உள்ள போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் இண்டர்நேஷனல் அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வர் என தெரிவித்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், தகுதி பட்டைகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தேக்வோண்டா அகாதெமி பொதுச் செயலர் கேசவமணி, ஈரோட மாவட்டச் செயலர் ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com