வேதிப் பொருள்களைக் கொண்டு பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல்லில் காய்கறி, பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள், மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம்

நாமக்கல்லில் காய்கறி, பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள், மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா ஆகிய பழ வகைகளை செயற்கை வேதிப் பொருள்களைக் கொண்டு பழுக்க வைத்தால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்சியம் கார்பைடு கற்களையோ அல்லது செயற்கை வேதிப் பொருள்களை தெளித்தோ பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் போது மக்களுக்கு உணவு உபாதை, அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கமும், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் அமைகிறது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் செயற்கை வேதிப் பொருள்களை தெளித்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அறிவுறுத்தியதற்கு பிறகும் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த நபர் மீது உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி குற்றவழக்கு பதிவு செய்யப்படும்.
பொதுமக்களின் நலன் கருதி நாமக்கல் காய்கறி மற்றும் கனி அங்காடி வணிகர்கள் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம். உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறிகள் விற்பனை செய்வோரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com