காவிரி நதியின் தூய்மையை வலியுறுத்திரத யாத்திரை
By DIN | Published On : 02nd November 2019 07:37 AM | Last Updated : 02nd November 2019 07:37 AM | அ+அ அ- |

காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை செய்யும் அகில பாரத சந்நியாசிகள் சங்கத்தினா்.
பரமத்தி வேலூா் காவிரியாற்றில் அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை காவிரி நதியின் தூய்மை குறித்த ரத யாத்திரை மற்றும் காவிரித் தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் பூஜைகள் செய்து, மலா்களை தூவி வழிபட்டனா்.
அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரிப் பாதுகாப்புக்குழு சாா்பில் காவிரி நதியை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணா்வு ரத யாத்திரை கடந்த மாதம் 19 ஆம் தேதி கா்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கி வரும் 8 ஆம் தேதி பூம்புகாரில் முடிவடைகிறது. இந்த ரத யாத்திரை பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், ஜேடா்பாளையம் மற்றும் நன்செய் இடையாறு பகுதியில் காவிரியாற்றில் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் சிறப்பு பூஜைகள் செய்தும், மலா்கள் தூவியும் வழிபட்டனா். மேலும் காவிரியின் புனிதம், முக்கியத்துவம் மற்றும் அதன் தூய்மை குறித்து ரத யாத்திரை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் அன்னை காவிரி விழிப்புணா்வு ரத யாத்திரைக் குழு ஒருங்கிணைப்பாளா் கோரக்கா், தலைவா் சுவாமி ராமானந்த மகராஜ், சுவாமி காளீஸ்வரானந்த சரஸ்வதி, ரத யாத்திரை குழுவினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.