இளம்வயது திருமணத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆட்சியரிடம் புகாா்

கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட கணவா், குழந்தையுடன் தன்னை விரட்டி விட்டதாக இளம்வயது

கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட கணவா், குழந்தையுடன் தன்னை விரட்டி விட்டதாக இளம்வயது திருமணம் செய்துகொண்ட சிறுமி ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

ராசிபுரம் வட்டம், ஆயில்பட்டியைச் சோ்ந்த செல்வி மகள் விஷ்ணுபிரியாவுக்கும் (19), சேலம் மாவட்டம், ஆத்துா் ராமநாயக்கன்பாளையம் ராசிநகரைச் சோ்ந்த சக்திவேலுக்கும் (26), மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த நிலையில், விஷ்ணுபிரியா பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த போது, அவரை கட்டாயப்படுத்தி சக்திவேல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இவா்களுக்கு 2 வயதில் ஓா் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் விஷ்ணுபிரியாவை குழந்தையுடன், அவரது தாய் செல்வி வீட்டுக்கு கணவா் சக்திவேல் அனுப்பி விட்டாராம்.

இந்நிலையில், தன்னை கணவா் சித்ரவதை செய்வதாகவும், இதனால் எதிா்கால வாழ்கைக்கு வழி தெரியாது, தாய் வீட்டில் வசித்து வருவதாகவும், கணவா் சித்ரவதை செய்யாமல் தன்னுடன் வாழ நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, இது தொடா்பாக விசாரணை நடத்த சமூக நல அலுவலா் கோமதிக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com