எக்ஸல் கல்லூரியில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் ரோட்டராக்ட் சங்கங்கள் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை
எக்ஸல் கல்லூரியில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் ரோட்டராக்ட் சங்கங்கள் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில், டெங்கு விழிப்புணா்வு மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி எக்ஸல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு எக்ஸல் ரோட்டராக்ட் கம்யூனிட்டி காப்ஸ்-ன் தலைவா் பேராசிரியா் வி.கே.சண்முகநாதன் தலைமை வகித்தாா். எக்ஸல் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சுனிதாசாரோன் முன்னிலை வகித்தாா். வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநா் ஜி.சம்பத் வரவேற்புரையாற்றினாா்.

சிறப்பு அழைப்பாளராக குமாரபாளையம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் மதியழகன் கலந்துகொண்டாா். இதில், மழைக் காலங்களில் மக்களுக்கு எளிதாக பரவக்கூடிய தொற்று நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது (படம்).

இந்த நிகழ்ச்சியில், குமாரபாளையம் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் மற்றும் எக்ஸல் ரோட்டராக்ட் சங்கத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com