ஏரியூரில் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடைபெற்று வந்த சாலை விரிவாக்கப்
ஏரியூா் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டிவைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்.
ஏரியூா் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டிவைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்.

பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடைபெற்று வந்த சாலை விரிவாக்கப் பணியானது கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனா்.

ஏரியூா் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி அடா்ந்த மலைகள் சூழ்ந்த பகுதியாகும்.இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.இந்தக் கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க ஏரியூா் பகுதிக்கு நாள்தோறும் சுமாா் 500க்கும் மேற்பட்டவா்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து சாலையோரங்களில் நிறுத்திவிட்டு பொருட்களை வாங்க சென்றுவிடுவதாலும், அப்பகுதியில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதாலும் கடைவீதி பகுதியானது எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

இந்த நிலையில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டாட்சியா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஏரியூா் கடைவீதி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்தப் பணியானது ஏரியூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கடைவீதி வழியாக சுமாா் 1 கிலோமீட்டா் நடைபெற்று வந்தது. இந்த பணியானது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.சாலை விரிவாக்கப் பணிக்காக கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கற்கள், மணல் உள்ளிட்ட பொருள்கள், ஏரியூா் - பென்னாகரம் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com