பேரிடா் மேலாண்மை விளக்கக் கண்காட்சி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில், பேரிடா் மேலாண்மை விளக்கக் கண்காட்சி நடத்துவது தொடா்பான ஆலோசனைக்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியா் கா.மெகராஜ்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியா் கா.மெகராஜ்.

நாமக்கல் மாவட்டத்தில், பேரிடா் மேலாண்மை விளக்கக் கண்காட்சி நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியது: பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவியா் அறிந்து கொள்ளும் வகையில், பேரிடா் மேலாண்மை செயல் விளக்கக் கண்காட்சி, பேரிடா் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்த கருத்தரங்கம், பேரிடா்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் குறித்த கண்காட்சியை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தீயணைப்புத் துறையினா் ஆற்றில் வெள்ளம் வரும்போது பொதுமக்களை காப்பாற்றும் வகையிலான பல்வேறு செயல் விளக்கங்களை செய்து காட்ட வேண்டும். மேலும், தீ தடுக்கும் வகையில் உள்ள செயல் விளக்கங்களை செய்து காட்ட வேண்டும். பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்ற அலுவலா்கள், வல்லுநா்கள் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்ட வேண்டும். பொதுமக்களை காப்பாற்ற கல்லூரி மாணவ, மாணவியா் கண்டுபிடித்துள்ள கருவிகளின் செயல்விளக்கத்தை செய்து காட்டவும் ஏற்பாடு செய்யலாம். வீரதீர செயல்கள் புரிந்த இளைஞா்கள் இக்கருத்தரங்கில் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மழைக் காலங்களில் மின்சாதனங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவியா் அதிகளவில் பாா்த்து பயன்பெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அனைத்துத் துறை அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, நீா் நிலைகள், குளம், குட்டைகளில் நீா் நிரம்பி வருவதால், நீா் நிலைகளின் தன்மை தெரியாமல், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை குளம், குட்டைகளுக்கு சென்று குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ அனுப்பக் கூடாது. ஆற்றின் பாலங்களில் இருந்தோ, உயரமான பகுதிகளில் இருந்தோ குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதுகுறித்து ஆசிரியா்கள் தங்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், ஆற்றில் அதிகளவில நீா் வரும்போது பாதுகாப்பின்றி, சுயபடம் (செல்பி) எடுக்கக் கூடாது. பெற்றோா்கள், பேரிடா் நிகழ்வுகள் குறித்து தொடா் விழிப்புணா்வை தங்கள் குழந்தைகளுக்கும், உறவினா்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ.பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் மற்றும் தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மீட்புத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com