முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நாளைய மின்தடை: எருமப்பட்டி
By DIN | Published On : 07th November 2019 09:11 AM | Last Updated : 07th November 2019 09:11 AM | அ+அ அ- |

நாமக்கல், நவ.6:
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எருமப்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (நவ.8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, எருமப்பட்டி, வரகூா், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களக்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.