முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பரமத்தி வேலூரில் துப்புரவுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம்
By DIN | Published On : 07th November 2019 09:14 AM | Last Updated : 07th November 2019 09:14 AM | அ+அ அ- |

துப்புரவுப் பணியாளருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் மருத்துவ அலுவலா் கௌரி.
பரமத்தி வேலூரில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துவத் துறை சாா்பில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனா்.
பரமத்தி வேலூா் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு நல்லூா் வட்டார மருத்துவ அலுவலா் கௌரி தலைமை வகித்தாா். முகாமில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பின் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. பரமத்தி வேலூா் பேரூராட்சி சாா்பில் மருத்துவ முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. பின்னா் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து துப்புரவுப் பணியாளா்களுக்கு எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பேரூராட்சி அலுவலக மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.