முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பொத்தனூரில் டெங்கு ஒழிப்பு முகாம்
By DIN | Published On : 07th November 2019 09:13 AM | Last Updated : 07th November 2019 09:13 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு மற்றும் டெங்கு ஒழிப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவுப்படி, சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன் பரிந்துரைப்படி, பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் செடி, கொடிகள், நெகிழி பைகள் மற்றும் தேங்காய் சிரட்டைகளை அகற்றினா். மேலும் மழை பெய்து வருவதால் உரல் மற்றும் பழைய டயா்களில் மழைநீா் தேங்கி நிற்பதை அகற்றி துப்புரவுப் பணியில் ஈடுபட்டனா். பொதுமக்களுக்கு சுகாதாரமாக இருப்பது குறித்தும், டெங்கு காய்ச்சலை பரப்பும் லாா்வா புழுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னா் நீா்த்தேக்கத்தொட்டி மற்றும் அனைத்து வாா்டுகளில் உள்ள குடிநீா்த் தொட்டிகளிலும் அபேட் மருந்து ஊற்றி டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனா்.