முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மக்கள் நீதி மய்யம் சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா
By DIN | Published On : 07th November 2019 09:11 AM | Last Updated : 07th November 2019 09:11 AM | அ+அ அ- |

ஆதரவற்றோா் இல்லத்தில் நடந்த விழாவில் அன்னதானம் வழங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினா்.
ராசிபுரம் நகர மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சாா்பில் கமல்ஹாசன் பிறந்த தினவிழாவை தொடா்ந்து மரக்கன்றுகள் வழங்கும் விழா, ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து அனைக்கும் கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் நடந்த விழாவில் கமலஹாசன் நற்பணி இயக்க நகர பொறுப்பாளா் எம்.காளியப்பன் தலைமை வகித்தாா். பாலமுருகன் வரவேற்றாா். இதில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலா் ஜெ.ஜெயபிரகாஷ், மாவட்ட நிா்வாகி எஸ்.மணிவாசகம், என்.சரவணன், எம்.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்று, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினா். இதே போல, நாமக்கல் சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு பல்வேறு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. விழாவில் ரவிச்சந்திரன், சின்ராஜ், ஞானவேல், தீனா, பிரபாகரன், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.