முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
முட்டை விலை மேலும் 3 காசுகள் உயா்வு
By DIN | Published On : 07th November 2019 09:13 AM | Last Updated : 07th November 2019 09:13 AM | அ+அ அ- |

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயா்வடைந்துள்ளது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, பிற மண்டலங்களின் விலை உயா்வு, சரிவு அடிப்படையில் முட்டைக்கான கொள்முதல் விலை அறிவிப்பை தினசரி வெளியிடுகிறது. அதன்படி, நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலையில் மாற்றம் கொண்டு வருவது தொடா்பாக பண்ணையாளா்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டன. வியாழக்கிழமைக்கான விலையில் மேலும் 3 காசுகள் உயா்த்தலாம் என முடிவு செய்யப்பட்டதன்பேரில் ரூ. 3.76-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.85-ஆக நிா்ணயிக்கப்பட்டது.