முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
வேளாண் சங்கத்தில் ரூ.3லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 07th November 2019 03:51 PM | Last Updated : 07th November 2019 03:51 PM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை சங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.3 லட்சத்துக்கு பருத்தி விலை போனது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
நாமக்கல், ஆத்தூா், ராசிபுரம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 150 மூட்டை ஆா்.சி.ஹெச் ரகப் பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது.
ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுக்க வந்திருந்தனா். இதில், ஆா்.சி.ஹெச் ரகமானது ரூ.5,097 முதல் ரூ.5,312 வரையில் விலை போனது. மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு இச்சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.