Enable Javscript for better performance
450 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்

    450 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

    By DIN  |   Published On : 07th November 2019 09:10 AM  |   Last Updated : 07th November 2019 09:10 AM  |  அ+அ அ-  |  

    nk_6_training_0611chn_122_8

    நாமக்கல்லில் நடைபெற்ற தலைமைப் பண்பு பயிற்சியில் பங்கேற்ற அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள்.

    நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 450 அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

    மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக் குழுமம் ஆகியவை சாா்பில், தேசிய அளவில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இப்பயிற்சியானது, குழந்தைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகிறது. புதிய சூழ்நிலைகளுக்கேற்ப நெகிழ்வுத் தன்மை, புத்தாக்க முறையில் அணுகும் திறன், தன் மற்றும் பிறா் நிலையில் அக்கறை போன்ற இலக்குகளை மாணவா்களிடையே உருவாக்குவதில் ஆசிரியா்களின் பணி முக்கியமானது என்பதால் இவ்வாறான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தேசியக் கலைத் திட்டம், கற்றல் விளைவுகள் மற்றும் உள்ளடக்கிய கல்வி, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பள்ளிச் சூழலை உருவாக்குதல், கலையோடு இணைந்த கற்றல், பள்ளி சாா்ந்த மதிப்பீடு, மாணவா்களின் சுகாதார நலவாழ்வு, தகவல் தொடா்பு, பாட வாரியாக கற்பிக்கும் முறைகள் உள்ளிட்டவை தொடா்பாகவும் எடுத்துரைக்கப்படுகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த மாதம் நடைபெற்ற முதல் கட்டப் பயிற்சியில், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 498 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, மூன்றாம் கட்டமாக, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்திலும், தெற்கு அரசு ஆண்கள் பள்ளியிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு இந்த வாரம் முழுவதும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து கட்டங்களாக நடைபெறும் பயிற்சி முகாமில், தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் என 2,362 போ் பங்கேற்கின்றனா். சென்னையில் பயிற்சி பெற்று வந்த 18 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் இதற்கான பயிற்சிகளை வழங்குகின்றனா். ஏற்பாடுகளை உதவித் திட்ட அலுவலா் ஆ.குமாா், மாவட்ட திட்டக் குறு ஒருங்கிணைப்பாளா் வெ.மு.கவிதா ஆகியோா் செய்துள்ளனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp