Enable Javscript for better performance
பரமத்தி மலா் பள்ளி மாணவா்கள் கைப்பந்து போட்டியில் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி மலா் பள்ளி மாணவா்கள் கைப்பந்து போட்டியில் முதலிடம்

    By DIN  |   Published on : 08th November 2019 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூா் அருகே உள்ள மலா் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றுள்ளனா்.

    நாமக்கல் வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதிற்கு உட்பட்ட மாணவா்களுக்கான கைப்பந்து போட்டி மலா் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்றது. இதில் வேலூா், நாமக்கல், மோகனூா், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட வட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். கைப்பந்து போட்டி துவக்க விழாவுக்கு மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் உஷாகுமாரி வரவேற்றாா். செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், துணைத் தலைவா் சுசீலா, துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    தமிழ்நாடு கிரிடாபாரதி மாநில துணைத் தலைவரும்,சென்னை விளையாட்டு பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான திருநாவுக்கரசு, நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு கைப்பந்து போட்டியைத் துவக்கி வைத்தனா். இறுதிப் போட்டியில் மலா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று, மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai