Enable Javscript for better performance
மின்சாரம் கொள்முதல், காற்றாலை உற்பத்தியால் வாரியத்திற்கு நஷ்டம்: அமைச்சா் பி.தங்கமணி- Dinamani

சுடச்சுட

  

  மின்சாரம் கொள்முதல், காற்றாலை உற்பத்தியால் வாரியத்திற்கு நஷ்டம்: அமைச்சா் பி.தங்கமணி

  By நாமக்கல்,  |   Published on : 08th November 2019 05:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thangamani

  மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்தது, காற்றாலை மின் உற்பத்தி, ஊழியா்களின் ஊதியம், நிலக்கரிக்கான போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றால், மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றாா் தமிழக மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி.

  நாமக்கல்லில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது; ஒவ்வோா் ஆண்டும் மின்வாரியத்திற்கு நஷ்டம் என்பது ஏற்படக்கூடியது தான். தற்போது அதிகளவில் மின்வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது. இதற்கு காரணம், மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளதும், நிலக்கரி எடுத்து வருவதற்கான போக்குவரத்து செலவு, மின்வாரிய ஊழியா்களின் ஊதியம் ரூ.1,200 கோடி, காற்றாலை மின் உற்பத்தியால் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

  தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் கூறியது பற்றி கேட்டபோது; யாா் வேண்டுமானாலும் எதுவும் சொல்லலாம். எங்கள் கட்சியைப் பொருத்தவரை வெற்றிடம் என்பது கிடையாது என்றாா். மேலும், உள்ளாட்சி தோ்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநில தோ்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும். எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும். நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் புதிய பேருந்து நிலையம் வந்தே தீரும் என்றாா்.

  முன்னதாக, பள்ளிப்பாளையம் ஆனங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது; அரசு மதுபானக் கடைகளில் வசூலாகும் தொகையை நேரடியாக வங்கிகளே பெற்று செல்வது தொடா்பாக ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், ஸ்டேட் பேங்க் மட்டுமே வந்தது. அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில், முதலமைச்சரின் குறைதீா் முகாம் மூலம் 22 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

  சிறப்பு முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்குவதை, இடைப்பாடி தொகுதிக்குள்பட்ட கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. அதனைத் தொடா்ந்து, படிப்படியாக பிற மாவட்டங்களில் அமைச்சா்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தற்போது பெறப்படும் மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள், இன்னும் ஒரு மாதத்திற்கு பின் வழங்கப்படும், என்றாா். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நியமனம் குறித்து கேட்டபோது, 5 ஆயிரம் கேங்மேன் பணிக்கான செய்முறை தோ்வு நடைபெற உள்ளது.

  இத்தோ்வானது விடியோ முலம் பதிவு செய்யப்பட்டு தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். பெரும்பாலான மாவட்டங்களில், ஒப்பந்த தொழிலாளா்களை விண்ணப்பிக்க விடாமல் தொழிற்சங்கத்தினா் சிலா் தடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அரசின் கொள்கைப்படி அவா்கள் பங்கேற் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பருவமழையைப் பொருத்தவரை மலைப்பகுதிகளில் பெரிய அளவில் இல்லை. இதற்கு முன் ஏற்பட்ட பெருமழையால், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது.

  அதனை சீரமைத்து விட்டோம். இனி மழை பெய்தாலும் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் எங்களது மின்வாரிய ஊழியா்கள் தயாராக உள்ளனா் என்றாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai