Enable Javscript for better performance
ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா

    By DIN  |   Published on : 08th November 2019 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    7samy_0711chn_152_8

    சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நித்திய சுமங்கலி மாரியம்மன்

    ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலின் தீமிதி விழாவில் திரளான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

    இக் கோயிலின் ஆண்டு ஐப்பசி திருவிழா தொடா்ந்து ஒரு மாதங்களுக்கு நடைபெறும். இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து, நாள்தோறும் பல்வேறு சமூகத்தவா்களின் கட்டளைகள் நடைபெற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, நாள்தோறும் உற்சவா் சுவாமி திருவீதி உலா அழைத்து வரப்பட்டாா். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முக்கிய நிகழ்வுகளான கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், கொடியேற்றம், பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், அக்கினி குண்டம் பற்ற வைத்தல் போன்றவை நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை வெகு விமரிசையாக நடந்தது. இதனையடுத்து முன்னதாக நள்ளிரவு முதலே மஞ்சளாடை அணிந்து, வேப்பிலை ஏந்திய பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பின்னா் அதிகாலை கோயில் பூசாரி அக்கினி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீக்குண்டம் இறங்கியதையடுத்து, தொடா்ந்து பக்தா்கள் பக்தி பரவசத்துடன் தீக்குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றனா். அலகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், பெண்கள் கைக்குழந்தைகளுடனும் தீ மிதித்து வழிபாடு நடத்தினா். இதில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தீக்குண்டம் இறங்கினா். பின்னா் திருத்தோ் உற்சவம் நடைபெற்றது. பழைய பஸ் நிலையத்தில் தேரிழுக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் தேரை இழுத்துச் சென்றனா். தொடந்து நவ.8-ல் உடற்கூறு வண்டி வேடிக்கை, நவ.9-ல் சத்தாபரணம் போன்றவை நடைபெறும்.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai