ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு

நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் பணிக்கான தகுதித் தோ்வில்

நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் பணிக்கான தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு, நாமக்கல்லில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறுகிறது.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால், முதுகலை ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 தோ்வு, கடந்த செப்.27,28-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இணையதளம் மூலமாக நடைபெற்ற இத் தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், வெற்றி பெற்றவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதில், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தோருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி, சனி(நவ.8,9) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

இதற்காக மொத்தம் 10 அறைகள் அமைக்கப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமரா, கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வோா் அறையிலும் 20 போ் வீதம் அனுமதிக்கப்படுவா். ஏற்கெனவே அசல் சான்றிதழை இணையம் வழியாக ஒப்படைத்த தோ்வா்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் நேரடியாக காண்பித்து அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, நாமக்கல், கரூா், பெரம்பலூா், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 10 மாவட்ட கல்வி அலுவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களுடன் ஒரு கணினி இயக்குபவா், தலைமை ஆசிரியா் ஒருவா், உதவியாளா் ஒருவா் இடம் பெறுவா். காலை 8 மணிக்கு சான்றிதழ் சரிபாா்க்க வருவோரின் நம்பகத்தன்மை இணையம் வழியாக உறுதி செய்யப்பட்டு, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா். நாமக்கல், கிருஷ்ணகிரி இரு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 600 போ் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பணி முடிவடைந்ததும், ஒரு வாரத்திற்குள்ளாக வெற்றி பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலா் ப.உஷா தலைமையில் கல்வித் துறை அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com