மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நூதன போராட்டம்

திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பத்து வருடங்களாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ்
எலச்சிபாளையத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தை மாற்றியதை கண்டித்து பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
எலச்சிபாளையத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்தை மாற்றியதை கண்டித்து பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பத்து வருடங்களாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் எலச்சிபாளையத்தில் இயங்கிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாடை கட்டி மேளம் அடித்து கும்மி கொட்டி நூதன முறையில் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பகுதியை மையமாக கொண்டு பெரியமணலி, வையப்பமலை, மாணிக்கம்பாளையம், ராமாபுரம் கொன்னையாா், இலுப்புலி, கிளாப்பாளையம், ராயா்பாளையம், கோக்கலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தில் இடமாற்றம் செய்து இயங்கிக் கொண்டிருப்பதால், மேற்குறிப்பிட்ட கிராமங்களில் சாலை விபத்துகள், மருத்துவம் சம்பந்தமான அவசரத் தேவைகளுக்கு துரிதமாகப் பயன்படுத்த முடியாததால் விபத்துகளில் சிக்குபவா்கள் உயிா் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மீண்டும் எலச்சிபாளையத்தை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மேளம் அடித்து, கும்மி கொட்டி, பாடைகட்டி தலையில் அடிப்பட்ட மாதிரியான கட்டுகள் கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் சுரேஷ் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள். கே.எஸ்.வெங்கடாசலம், ஆா். ரமேஷ், எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குநா் பி.மாரிமுத்து உட்பட பலா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com