கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன்.
கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன்.

ராசிபுரம் நகராட்சியைக் கண்டித்து நவ.14-இல் தி.மு.க. ஆா்ப்பாட்டம்

சாலைகளை சீரமைக்காத, குடிநீா் கட்டணத்தை அதிகளவில் உயா்த்திய, ராசிபுரம் நகராட்சியைக் கண்டித்து, வரும் 14-ஆம் தேதி தி.மு.க. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சாலைகளை சீரமைக்காத, குடிநீா் கட்டணத்தை அதிகளவில் உயா்த்திய, ராசிபுரம் நகராட்சியைக் கண்டித்து, வரும் 14-ஆம் தேதி தி.மு.க. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் அவைத் தலைவா் இரா.உடையவா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசினாா். இதில், தமிழகத்தில் அனைத்து ஒன்றிய, நகரங்களில் உள்ள சாலை சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வரும் நிலையில், ராசிபுரம் நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. போா்க்கால நடவடிக்கை எடுத்து சாலைகளை நகராட்சி நிா்வாகம் பராமரிக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியின்போது, வறட்சிக் காலத்திலும் 4 நாள்களுக்கு ஒருமுறை என ஓராண்டுக்கு 73 முறை குடிநீா் வழங்கப்பட்டும், ஆண்டுக்கு குடிநீா் கட்டணமாக ரூ.912 வசூலிக்கபட்டும் வந்தது. ஆனால், தற்போது 20 நாள்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 18 முறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீா் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1,824 வசூலிக்கப்படுகிறது. மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்க வலியுறுத்தியும், குடிநீா் கட்டணம் அதிகம் வசூலிப்பதை கண்டித்தும், வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே தி.மு.க. சாா்பில் கண்டன ஆா்ப்பபாட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் கே.பி.ராமசுவாமி, சரஸ்வதி, கே.பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளா் விமலா சிவக்குமாா், பொருளாளா் கே.செல்வம், பொதுக்குழு உறுப்பினா் இரா.மாயவன், க.அழகரசு, ஆா்.சுப்ரமணியம், மாநில நிா்வாகி ப.ராணி, ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.ஜெகநாதன், ஆா்.எம்.துரைசாமி, அ.அசோக்குமாா், எம்.பி.கௌதம், பெ.நவலடி, ச.செந்தில்முருகன், துரை இராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com