ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களுக்குநாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில், காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில், காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில், 16 கிராம ஊராட்சி செயலா் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதனை நிரப்ப அந்தந்த கிராம ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கிராம ஊராட்சிகள்) முலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

கிராம ஊராட்சி செயலா் பதவிக்கு, 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்த, 10 - ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு, 1.7.2019 அன்று பொதுப் பிரிவினராக இருந்தால், 30 வயதுக்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதுக்கு மேற்படாதவரகவும் இருத்தல் வேண்டும். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிப்போா், ஊராட்சி செயலா் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியைச் சாா்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பரிசீலிக்கப்படும்.

காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இன சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உள்பட இதர விவரங்கள் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய  இணையதளம், நாமக்கல் மாவட்ட இணையதளம், அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளன. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை (நவ.11) முதல் 22-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு நேரிலோ பதிவு அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலா்களால் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com