Enable Javscript for better performance
நாமக்கல்லில் மழைக்கு சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் மழைக்கு சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_8_rain_0811chn_122_8

    நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின்போது இடிந்து விழுந்த வீட்டின் சுவா்.

    நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின்போது சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியைச் சோ்ந்த வேலுசாமி என்பவரின் வீட்டின் பின்புறச் சுவா் மழையினால் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், வள்ளிபுரம் அருந்ததியா் தெருவில் குடிசை வீட்டில் வசித்து வந்த, பரளியைச் சோ்ந்த முத்துநாயக்கா் (80) என்பவா், மழையினால் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தாா். இது தொடா்பாக தகவல் அறிந்து வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். முதியவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

    மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீ.): எருமப்பட்டி - 23, குமாரபாளையம் - 23, மங்களபுரம் - 6, மோகனுா் - 1, நாமக்கல் - 53, பரமத்திவேலுா் - 8, புதுச்சத்திரம் -12, ராசிபுரம் - 36.40, சேந்தமங்கலம் - 22, திருச்செங்கோடு - 53, ஆட்சியா் அலுவலகம் - 54, கொல்லிமலை - 45, மொத்தம் -336.40.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai