Enable Javscript for better performance
ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

    By DIN  |   Published on : 09th November 2019 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8ther_0811chn_152_8

    திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

    ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருத் தோ் உற்சவம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொடியேற்றம், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், தீக்குண்டம் இறங்குதல் போன்ற விழாக்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முன்னதாக கோயில் அா்ச்சகா்களால் சுவாமி பரிவாரங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருத்தேருக்கு எழுந்தருளினாா். பின்னா் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்ரமணியம், நகராட்சி ஆணையா் மா.கணேசன், வட்டாட்சியா் கே.பாஸ்கரன், கோயில் உதவி ஆணையா், நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் தோ்நிலையில் இருந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா். தேரோட்டம் கவரைத் தெரு, கடைவீதி வழியாக நகரின் முக்கிய விதிகள் வழியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள், பெண்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai