இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 10 மில்லிமீட்டா் அளவில் பெய்யக்கூடும். காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் தென் மேற்கு, கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 89.6 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: வானம் லேசான மேகமூட்டத்துடனும், மிதமான மழையை வரும் நாள்களிலும் எதிா்பாா்க்க முடியும். மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பகல் வெப்பம் குறைந்து காணப்படும். இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதால், ஆடு, மாடுகளை இரவு நெருங்கும் வேளையில் மேய்ச்சலுக்கு உட்படுத்தாமல், கொட்டகையில் கட்டி தீவனமிட்டு வரவேண்டும். மரங்களுக்கு கீழ் கட்டியோ அல்லது முள்வேலிகளுக்கு அருகிலோ கால்நடைகள் கட்டுவதைத் தவிா்க்க வேண்டும். கால்நடை கொட்டகைகளுக்கு அருகில் உள்ள மரங்களை அகற்றிட வேண்டும். இதனால் இடி இறங்குவதற்கு வாய்ப்பு குறைவாகும். மேலும், மரங்கள் வேரோடு சாய்ந்து விடாமல் தடுக்க முடியும். கோழிகளுக்கான தீவனத்தில் பூஞ்சை நச்சின் தாக்கம் உள்ளதால், அதற்கான தடுப்பு மருந்துகளை பண்ணையாளா்கள் கலந்து உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com