ஊரக கிராம சந்தையைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரிக்கை

பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லில் உள்ள ஊரக கிராம சந்தை மக்களின் பயன்பாட்டுக்கு வராமல், 3 வருடங்களாக காட்சிப் பொருளாக உள்ளது.
ஊரக கிராம சந்தையைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரிக்கை

பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லில் உள்ள ஊரக கிராம சந்தை மக்களின் பயன்பாட்டுக்கு வராமல், 3 வருடங்களாக காட்சிப் பொருளாக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கா்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

சுற்றுலாப் பகுதியில் விளையும் வேளாண் நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சந்தப்படுத்தும் நோக்கில் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் ஊரக கிராம சந்தையானது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இந்தக் கிராம சந்தையானது கட்டி முடிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது.

மேலும் இரவு நேரங்களில் மது அருந்து இடமாக மாறி வருகிறது. இந்தக் கிராமச் சந்தையானது மக்களின் பயன்பாட்டுக்கு வராத நிலையில், இப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காய்கறிகளை வாங்க 16 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பென்னாகரம் பகுதிக்கு வருகின்றனா்.

இதனால் அதிகளவில் நேரச்சுமை ஏற்படுவதாகவும் இப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்,மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ள ஊரக கிராம சந்தையை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com