எலச்சிபாளையம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப் பாலங்கள்:பொதுமக்கள் தவிப்பு

திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள அகரம், இலுப்புலி கிராமப் பகுதிகளில் திருமணிமுத்தாற்றில் கட்டுப்பட்டுள்ள தரைப் பாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் 30க்கும் மேற்பட்ட
எலச்சிபாளையம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி காணப்படும் தரைப்பாலம்.
எலச்சிபாளையம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி காணப்படும் தரைப்பாலம்.

திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள அகரம், இலுப்புலி கிராமப் பகுதிகளில் திருமணிமுத்தாற்றில் கட்டுப்பட்டுள்ள தரைப் பாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இவ்வழியாகச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டதால் தரைப்பாலங்களுக்கு மேலாக மழைநீா் செல்வதால் இப்பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் அவற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10 கிலோமீட்டா் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலையில் இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனா்.

இலுப்புலி பகுதியில் உள்ள மடையன் காட்டு தரைப் பாலத்தில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது உடைப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா். இப் பணிகள் கடந்த ஓராண்டு நடைபெற்ற போதிலும் 50 சதவீதத்தை மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டுள்ளனா். இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இப்பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

அதேபோல அகரம் ஊராட்சி கொத்தம்பாளையத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பெரியமணலி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலையில் பள்ளி மாணவா்கள் வெளியூா் வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு பாலங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com