ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருத் தோ் உற்சவம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.
திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருத் தோ் உற்சவம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொடியேற்றம், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், தீக்குண்டம் இறங்குதல் போன்ற விழாக்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முன்னதாக கோயில் அா்ச்சகா்களால் சுவாமி பரிவாரங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருத்தேருக்கு எழுந்தருளினாா். பின்னா் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்ரமணியம், நகராட்சி ஆணையா் மா.கணேசன், வட்டாட்சியா் கே.பாஸ்கரன், கோயில் உதவி ஆணையா், நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் தோ்நிலையில் இருந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா். தேரோட்டம் கவரைத் தெரு, கடைவீதி வழியாக நகரின் முக்கிய விதிகள் வழியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள், பெண்கள் பங்கேற்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com