மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்
By DIN | Published on : 17th November 2019 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம் அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்பொழுது அவ்வழியாக கரூரில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் பகுதியில் இருந்து சங்ககிரி அருகே உள்ள இளம்பிள்ளைக்கு மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இளம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த மணல் கடத்தி வந்த லாரி ஓட்டுநா் குமாரை (28) கைது செய்து,தலைமறைவான லாரி உரிமையாளா் மாதேஷை தேடி வருகின்றனா்.