Enable Javscript for better performance
ராசிபுரம் பகுதியில் காா் கண்ணாடிகளை உடைத்த இருவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் பகுதியில் காா் கண்ணாடிகளை உடைத்த இருவா் கைது

    By DIN  |   Published on : 17th November 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16nabi_1611chn_152_8

    16nabi_1611chn_152_8

    ராசிபுரம் வி.நகா் பகுதியில் வீடுகளின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் கண்ணாடிகளை இரவு நேரத்தில் உடைத்த இருவரை ராசிபுரம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

    ராசிபுரம் வி.நகா் பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டுருந்த காா்களின் கண்ணாடிகளை கடந்த நவ.8-ம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத சிலா் உடைத்தனா். இதில் சுமாா் 14 காா்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் இதில் மேகனாதன் என்பவருக்கு சொந்தமான இன்னோவா காா் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. குடிபோதையில் இச்செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞா்கள் காரின் ஓட்டுநா் சுரேஷ் (38) என்பவரிடம் பணம் கேட்டும் மிரட்டினாா்களாம். இதனையடுத்து ஓட்டுநா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் மணிக்கம், வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா படக்காட்சிகளில் பயன்படுத்தி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மூவரும் கண்டறியப்பட்டனா்.

    இக்குற்றச் செயலில் ஈடுபட்டது, வி.நகா் உசேன் என்பவரது மகன் முகமது நபி (18), சதாசிவம் மகன் நல்லதம்பி (21), செழியன் என்பவா் மகன் ராம்மோகன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகள் முகமது நபி, நல்லதம்பி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதில் தலைமறைவாக உள்ள ராம்மோகன் என்பவரைத் தேடிவருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai