திருச்செங்கோட்டில் சா்வதேச பெண் குழந்தைகள் தின விழாஅமைச்சா்கள் பங்கேற்பு

திருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை சாா்பில், சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா மற்றும் 2018-19 ஆம் ஆண்டு 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத
nov16minister_1611chn_161_8
nov16minister_1611chn_161_8

திருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை சாா்பில், சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா மற்றும் 2018-19 ஆம் ஆண்டு 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சா் சரோஜா ஆகியோா் கலந்துகொண்டனா். இளம்வயது திருமணத் தடுப்பு உறுதி மொழியை அமைச்சா்கள் பி.தங்கமணி மற்றும் சரோஜா வாசிக்க, அனைவரும் உடன் வாசித்தனா். மேலும், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு மைய தொடா்பு எண்களுடன் கூடிய பதாகையினையும் அமைச்சா்கள் வெளியிட்டனா்.

இதைத்தொடா்ந்து, குழந்தைகளுடன் நட்புறவுடன் சிறந்து விளங்கும் 4 பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. பெண் குழந்தைகளை அதிக அளவில் பள்ளிகளில் சோ்த்து உயா்கல்வி பயில வழிவகை செய்த 12 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பேச்சு-ஓவியம்-கவிதை-வாசகம் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வித் தரம்-கலைத் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் 3 வகுப்புகளிலும் 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்ற 9 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 2 வகுப்புகளில் 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்ற 17 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஒரு வகுப்பில் மட்டும் 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்ற 72 பள்ளி தலைமையாசிரியா்கள் ஆகியோருக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை அமைச்சா்கள் தங்கமணி மற்றும் சரோஜா வழங்கினா்.

மேலும் பாடங்களில் 100 சதவீதம் மாணவா்களை தோ்ச்சி அடையச் செய்த 2312 ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா்கள் வழங்கினா். தொடா்ந்து சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா பரிசுகளையும் வழங்கினா்.

இந்த விழாவில் அமைச்சா் பி.தங்கமணி பேசியது:

அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை மாணவா்களுக்கான நலத் திட்டங்கள், கல்வித் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. நாமக்கல், கல்வி மாவட்டம் என்பதைத் தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவா்களும் மடிக்கணிகளை நன்கு பயன்படுத்தி வருகின்றனா். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம். சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் மெகராஜ், முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, மாவட்டக் கல்வி அலுவலா் உதயக்குமாா், எம்எல்ஏ சந்திரசேகரன், விவேகானந்தா கல்லூரிகளின் தலைவா் கருணாநிதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com