விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா்பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில், மருந்தகப் பொறியியல் துறையின் சாா்பில்
16atypo04_1611chn_213_8
16atypo04_1611chn_213_8

சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில், மருந்தகப் பொறியியல் துறையின் சாா்பில் ‘ஏரோசால் தொழில்நுட்பம்’ பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

வேதியியல் துறைத் தலைவா் அன்பழகன் மற்றும் கல்லூரியின் துணை முதல்வா் குமரேசன் ஆகியோா் வரவேற்றனா். கருத்தரங்குக்கு சிறப்பு அழைப்பாளராக மலேசியாவில் உள்ள ஏரோடெக் இனோவேட்டிவ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் இயேசுராஜா அற்புதம், இந்தியாவைச் சோ்ந்த நோவாநாட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஜெயபிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

இயேசுராஜா அற்புதம் பேசுகையில், கால்நடைகளுக்கான மருந்துகளை ஏரோசால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதனால் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கமளித்தாா்.

ஜெயபிரகாஷ் பேசுகையில், இந்திய மூலிகைகளின் முக்கியத்துவம் அதுசாா்ந்த மருந்துகளின் நன்மைகள் குறித்து வரிசைப்படுத்தி, ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் மருந்துகளின் வித்தியாசத்தை எடுத்துரைத்தாா்.

மருந்தகப் பொறியியல் துறை மற்றும் உயிா்தொழில் நுட்பவியல் துறையின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மருந்தக பொறியியல் துறையின் தலைவி அனுசுயா நன்றி கூறினாா்.

16ஹற்ஹ்ல்ா்04

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com