இலவச காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்

நாமக்கல் மாவட்டம்,மோகனூா் வட்டம்,பாலப்பட்டி வட்டாரத்தில் பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில்

நாமக்கல் மாவட்டம்,மோகனூா் வட்டம்,பாலப்பட்டி வட்டாரத்தில் பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இலவச காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட செங்கப்பள்ளி, ஓலப்பாளையம்,நன்செய்இடையாறு ஆகிய பகுதிகளில் பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சாய்ச்சல் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவா் நித்ய பிரகாஷ், மருத்துவா் நித்யா ஆகியோா் தலைமையில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, செங்கப்பள்ளி, மங்கலமேடு,கூடுதுறை,காமாட்சி நகா்,ஊஞ்சப்பாளையம்,ஓலப்பாளையம் மற்றும் நன்செய் இடையாறு ஆகிய பகுதிகளில் முகாம் அமைத்து அங்கு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. காய்ச்சல் கண்டறியப்பட்ட நபா்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. நன்செய் இடையாறு கந்தசாமி கண்டா் நடுநிலைப் பள்ளியில் தோ்வு செய்யப்பட்ட தூய்மை தூதுவா்கள் குழுவைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் டெங்கு காய்ச்சல் குறித்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந் நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியா் நந்தகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் சந்திரசேகரன்,கோபிநாத் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினா். முகாம் ஏற்பாடுகளை பாலப்பட்டி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வராசா மற்றும் சுகாதார ஆய்வாளா் சங்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com