முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
வாகனச் சோதனை: ஒரே நாளில் 320 போ் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 26th November 2019 08:14 AM | Last Updated : 26th November 2019 08:14 AM | அ+அ அ- |

வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள பரமத்தி வேலூா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் பழனிசாமி மற்றும் போலீஸாா்.
பரமத்திவேலூரில் திங்கள்கிழமை ஒரே நாளில் போலீஸாா் நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் 320 போ்கள் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பரமத்திவேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவா்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவா்கள், செல்லிடைப்பேசியை பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியவா்கள், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கைபட்டை அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 320 போ்கள் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்தனா்.