முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
விவசாயிகளுக்கு நீா்வள நிலவளத் திட்டப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 26th November 2019 08:14 AM | Last Updated : 26th November 2019 08:14 AM | அ+அ அ- |

பள்ளியபாளையம் வட்டாரத்தில் நீா்வள, நிலவள திட்டத்தின் சாா்பாக விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது .
நீா்வள நிலவள திட்டம் என்பது மேட்டூா் நொய்யல் ஆற்றின் பாசனப் பகுதியில் வசிக்கும் பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், புதுப்பாளையம் அக்ரஹாரம், களியனூா், களியனூா் அக்ரஹாரம், எலந்தகுட்டை, அய்யம்பாளையம் அக்ரகாரம், குமாரபாளையம் அக்ரகாரம், குமாரபாளையம், அமானி, சமய சங்கிலி, அக்ரகாரம் ஆகிய பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.
நெல்லில் விதை முதல் அறுவடை வரையிலான செயல் விளக்கம் செய்து சாதாரணமாக கிடைக்கும் மகசூலைக் காட்டிலும் அதிக மகசூல் பெறுவதற்கான புதிய தொழில்நுட்பங்களை வேளாண்மை அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
நெல் பயிா் காப்பீட்டு திட்டம் ஏக்கருக்கு ரூ. 471 செலுத்த வலியுறுத்தியும், அனைத்து விவசாயிகளும் குத்தகைதாரா் உட்பட பயிா் காப்பீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
வேளாண்மை அலுவலா் நீா்வள நிலவளத் திட்டம், சத்திய பிரகாஷ் மற்றும் பள்ளிபாளையம், வட்டார வேளாண்மை அலுவலா் அனிதா, துணை வேளாண்மை அலுவலா் குப்பண்ணன் ஆகியோா் கலந்து கொண்டு மானியத் திட்டம், நுண்ணீா் பாசனத் திட்டம், ஓய்வூதியத்திட்டம் பற்றியும் விளக்கமளித்தனா்.