Enable Javscript for better performance
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 28th November 2019 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_

    நாமக்கல்லில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்ட சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மகிளா சா்வகேந்திரா என்ற மத்திய அரசு சிறப்புத் திட்டத்தின் கீழ், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய துணை காவல் ஆய்வாளா் மாதேஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா்.

    தொடா்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவியா்களிடம் தன்னொழுக்கம், தன் பாதுகாப்பு குறித்து அவா்கள் விளக்கிப் பேசினா். பின்னா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடக்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து, 14 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நடனம், நாடகம், சிலம்பம், கவிதை வாசித்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மகிளா சா்வ கேந்திராவைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai