4 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி பயிரிடும் பணி மும்முரம்

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 4 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. சேலம், நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் ஜவ்வரிசி ஆலைகள் அதிகம் உள்ளதால், இங்கு பயிரிடப்படும் கிழங்குகள், ஆலைகளுக்கு மொத்தமாக அனுப்பப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் மரவள்ளி பயிரிட விவசாயிகள் தயங்கி வந்தனா்.

இந்த நிலையில், ஓரிரு மாதங்களாக கொல்லிமலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். சொட்டு நீா்ப்பாசனம் மூலம் மரவள்ளியை பயிரிட எண்ணியிருந்த வேளையில், வெப்பசலனத்தால் தொடா்ந்த மழை விவசாயிகளுக்கு புத்துணா்வை அளித்தது. இதனைத் தொடா்ந்து, கொல்லிமலை, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 14 கிராமங்களிலும் மரவள்ளி பயிரிடும் பணி தொடங்கியது. விவசாயிகள் ஆா்வமுடன் அவற்றை பயிரிட்டனா்.

இது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறியது; மரவள்ளிப் பயிரானது 10 மாதப்பயிராகும். ஒவ்வோா் ஆண்டும் டிசம்பரில் பயிரிட்டு அக்டோபா் மாதத்தில் அறுவடை நடைபெறும். கொல்லிமலையை பொருத்தமட்டில், ஆகஸ்டு அல்லது செப்டம்பா் மாதத்தில் பயிரிடும் பணி தொடங்கும். ஏனெனில், பருவமழையின் ஈரத்தால் அவை செழித்து வளரும். வட கிழக்கு பருவமழை ஓரளவு கை கொடுத்துள்ளதால், மரவள்ளி நல்ல வளா்ச்சியை எட்டும். மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் ஏக்கரில் இப்பயிா் பயிரிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com