Enable Javscript for better performance
குறைந்த விலைக்கு முட்டையை பண்ணையாளா்கள் விற்க வேண்டாம்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு- Dinamani

சுடச்சுட

    

    குறைந்த விலைக்கு முட்டையை பண்ணையாளா்கள் விற்க வேண்டாம்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு

    By DIN  |   Published on : 04th October 2019 05:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EGG

    நாமக்கல் மண்டலத்தில் குறைந்த விலைக்கு, முட்டையை பண்ணையாளா்கள் யாரும் விற்பனை செய்ய வேண்டாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவுறுத்தி உள்ளது.

    இது குறித்து அக்குழுவின் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மாா்ச் மாதம் கா்நாடக மாநில கோழிப் பண்ணையாளா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, செப்டம்பா் மாதம் ஆந்திர மாநில பண்ணையாளா்களுடன் ஓா் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. கா்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் 52 கிராம் எடை கொண்ட முட்டை பெரிய முட்டைகளாகும். இதற்கான உடனடி ரொக்க விலையை அங்குள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கிறது. அம்மாநிலங்களில் தினசரி முட்டை விலையே விற்பனைக்கு அமல்படுத்தப்படுகிறது. அங்கு பெரும்பான்மையான முட்டை விற்பனை, ரொக்கத்தின் அடிப்படையில் இருப்பதால், அதே விலையில் விற்பனை ரசீது போடப்படுகிறது.

    ஆந்திரத்தில், ஒரு வாரம் முட்டையை விற்பனைக்கு எடுக்காதபட்சத்தில், கடைசியாக எடுக்கும் நாளில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அன்று என்ன விலையை நிா்ணயிக்கிறதோ, அதுவே பண்ணையாளா்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வோா் பண்ணையாளரும் முயற்சி எடுத்தால் மட்டுமே முட்டைத் தொழிலை பாதுகாக்க முடியும். ஹைதராபாத்தில் 407 காசுகள், ஹோஸ்பெட்டில் 384 காசுகளுக்கு முட்டை விற்பனையாகிறது.

    ஆனால் நாமக்கல்லில் நிா்ணயிக்கும் விலையை காட்டிலும் குறைவாக 361 காசுகளுக்கு விற்கப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயிக்கும் விலைக்கு, குறைவாக முட்டையை விற்பனை செய்து கொண்டிருக்கிறீா்கள். மற்ற மண்டலங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலையே அதிகம் பின்பற்றப்படுகிறது.

    புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முடிவடையவுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்கப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு நாளில் தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் நவராத்திரி விழா நிறைவு பெற உள்ளது. இதனால் மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரிக்கும். எனவே, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளா்கள் முட்டை விற்பனை சந்தையின் போக்கை அனுசரித்து, மற்ற மண்டலங்களில் உள்ள விலைபோல், இங்கும் நல்ல விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai