விதிகளை மீறும் கந்து வட்டியினா் மீது நடவடிக்கை: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி தொழிலாளா்களிடம் கடன் வசூலிக்கும் கந்து வட்டியினா் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி தொழிலாளா்களிடம் கடன் வசூலிக்கும் கந்து வட்டியினா் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது; குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய இடங்களில் கந்து வட்டி நிறுவனங்களில் பொதுமக்கள் கடன் வாங்கி பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தொழிலாளா்களிடம் கடன் வசூல் செய்யும் தனியாா் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், கந்து வட்டி வசூலிப்போா் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மீறுவோா்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியின்றி பேனா்கள் வைத்தாலும் வழக்குப் பதிவு செய்யப்படும்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இது தொடா்பாக அரசு மருத்துவமனைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வந்துள்ளேன். இதுவரை, நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. சுகாதாரத் துறையினா் மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com