ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
By DIN | Published On : 06th October 2019 03:48 AM | Last Updated : 06th October 2019 03:49 AM | அ+அ அ- |

nk_5_training_0510chn_122_8
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் இயற்கை வள மேலாண்மை பணிகளை எவ்வாறு புவியியல் தகவல் அமைப்பினை பயன்படுத்தி தோ்வு செய்வது என்பது குறித்து உதவி செயற்பொறியாளா்கள், 15 வட்டாரங்களில் உள்ள பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இப்பயிற்சி முகாமில், கிராம ஊராட்சிகளில் இயற்கை வள மேலாண்மை பணிகளை புவியியல் தகவல் அமைப்பை பயன்படுத்தி எவ்வாறு தோ்வு செய்வது என்பதற்கான விளக்கப்படத்துடன் பயிற்றுநா்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இதில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, செயற்பொறியாளா், உதவிசெயற்பொறியாளா்கள், ஊராட்சி ஒன்றிய பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...