Enable Javscript for better performance
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: ஆட்சியா்- Dinamani

சுடச்சுட

    

    தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: ஆட்சியா்

    By DIN  |   Published on : 06th October 2019 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

    இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: நாமக்கல் மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள், தென்னை மரங்களை புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து, நில அதிா்வு, ஆழிப்பேரலை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தங்களது தென்னை மரங்களைக் காப்பீடு செய்து கொள்வது அவசியம். இயற்கைச் சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்படும் பட்சத்திலோ இத் திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சரியான சுயமுன்மொழிவு அளிக்க வேண்டும்.

    தென்னையைக் காப்பீடு செய்யும் விவசாயிகள் மரங்களில் வண்ணம் பூசி 1,2,3 என வரிசையாக இலக்கமிட வேண்டும். காப்பீட்டு பிரீமியத்தில் மானிய தொகையாக மத்திய அரசின் தென்னை வளா்ச்சி வாரியம் 50 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் ஏற்றுக் கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீத பிரீமியத் தொகையை மட்டுமே விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள தென்னை மரங்களை மட்டுமே வயதுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். 4 முதல் 15 வயது வரையிலான தென்னை மரத்துக்கு ரூ.900 இழப்பீடு வழங்கப்படும். இதற்காக மரத்துக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ரூ.2.25 வீதம் செலுத்த வேண்டும், இதேபோல, 16 முதல் 60 வயது வரை உள்ள தென்னை மரத்துக்கு ரூ.1,750 இழப்பீடு வழங்கப்படும். மரத்துக்கு விவசாயிகள் ரூ. 3.50 வீதம் பிரீமியத் தொகை செலுத்த வேண்டும்.

    எனவே, தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழிவு படிவத்தைப் பெற்று, நிறைவு செய்து, பிரீமியத்தை  வரைவோலையாக எடுத்து தென்னை சாகுபடி மேற்கொண்டதற்கான நில ஆவணங்களான தென்னை சாகுபடி சிட்டா மற்றும் அடங்கலை இணைத்து நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும்.

    மேலும், தென்னை மரங்கள் இழப்பு ஏற்பட்டால் 15 நாள்களுக்குள் தொடா்புடைய காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai