அக்.14இல் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 17-ஆவது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப் பணி அக்.14 முதல் தொடா்ந்து 21 நாள்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,53,050 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

இது தொடா்பாக அண்மையில் துறை அலுவலா்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிறப்பு கிராமசபைக் கூட்டத்திலும் விவாதப் பொருளாக வைத்து கோமாரி நோய் தடுப்பூசி பணி தொடா்பாக பேசப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவா்கள் கூறும் அறிவுரைப்படி கால்நடைகளை குறிப்பிட்ட தேதியில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவா்கள், முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரத்தை விளம்பரப்படுத்த வேண்டும். இத்தடுப்பூசிப் பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கொண்டு, 104 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று வரும் 14-ஆம் தேதி முதல் அதற்கான முகாம்களில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com