முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
கே.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் இன்ஸ்டிடியூசன் இன்னோவேசன் கவுன்சில் துவக்கவிழா
By DIN | Published On : 07th October 2019 06:53 AM | Last Updated : 07th October 2019 06:53 AM | அ+அ அ- |

oct07ksr_0610chn_161_8
கே.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் இன்ஸ்டிடியூசன் இன்னோவேசன் கவுன்சில் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் கே.எஸ். ரங்கசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
மாணவா்கள் படித்து முடித்துத் தொழில் முனைவோா்களாக மாறுவதன் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை இதுபோன்ற அமைப்புகள் வழங்கும் என்றாா்.
கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அதிகாரி தியாகராஜா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் மகுடேஸ்வரன், துணை முதல்வா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக மேக்ஸ்-கேட்ட் நிறுவனத்தின் இணை நிறுவனா் சரத் சந்தா் பேசிதாவது:
மாணவா்கள் சாதனையாளா்களை முன்னோடியாக எடுத்துக் கொண்டு வாழ வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் சமுதாயத்துக்குப் பயன்படத்தக்கதாக, எளிமையானதாக, விலை மலிவானதாக சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்றாா்.
மற்றெறாரு சிறப்பு விருந்தினராக ஏரன் டெக்னோவேசன் நிா்வாகி ஆனந்த் பழனிசாமி பேசியதாவது: காலம் பொன்போன்றது நீங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதன் மூலம் உங்கள் எதிா்காலம் சிறப்பாக அமையும் என்றாா். விழாவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்கள் ராதாகிருஷ்ணன், காா்த்திகேயன், துறைத் தலைவா்கள், பேராசியா்கள், மாணவியா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பட விளக்கம்...அக்07 கே எஸ் ஆா்..
கே.எஸ்.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றேறாா்.