முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 07th October 2019 06:50 AM | Last Updated : 07th October 2019 06:50 AM | அ+அ அ- |

அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசுகிறாா் குமாரபாளையம் நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ். சேகா்.
நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு விழா குமாரபாளையத்தை அடுத்த ஆலாங்காட்டு வலசில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் ஏ.பழனிவேல் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெகதீசன் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் என்.சுப்பிரமணியம் வரவேற்றாா். குமாரபாளையம் நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.சேகா் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
கவிஞா் மல்லை மு.ராமநாதன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் லோகநாதன், செயலா் செந்தில்குமாா், திமுக மாவட்டப் பிரதிநிதி ரவி, தட்டாங்குட்டை அதிமுக கிளைச் செயலா் குமரேசன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.