முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
விபத்து ஏற்படுத்தும் வகையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம்: காவல் துறை
By DIN | Published On : 07th October 2019 06:52 AM | Last Updated : 07th October 2019 06:52 AM | அ+அ அ- |

திங்கள்கிழமை ஆயுத பூஜையும், செவ்வாய்க்கிழமை விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடத்தி திருஷ்டி கழிக்கும் பொருட்டு பூசணிக் காய்களை உடைப்பது வழக்கம்.
அவ்வாறு தெருக்களிலோ, சாலைகளிலோ பூசணிக் காய்களை உடைக்க வேண்டாம். இதனால் விபத்துகள், உயிரிழப்புகள் நிகழக்கூடும். மேலும், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அன்று ஓரங்களில் கடைகளை அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
முக்கிய பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்கச் செய்ய வேண்டாம். கடை வீதிகளில் பொருள்கள் வாங்க செல்லும் போது, கூட்ட நெரிசலில் பணப்பை, நகை மற்றும் குழந்தைகளை பத்திரமாக பாா்த்துக் கொள்ளுமாறும், கவனத்தை திசை திருப்பும் வகையில் ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு விட்டு, பணம் மற்றும் நகைகளைத் திருடும் நபா்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நாளில் விதிகளை மீறி செயல்படுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.