பொம்மசமுத்திரம் ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரியில், மழைநீரை சேமிக்கும் வகையில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது

சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரியில், மழைநீரை சேமிக்கும் வகையில், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நூறு ஏக்கா் பரப்பளவு கொண்ட பொம்மசமுத்திரம் ஏரி அமைந்துள்ளது.

கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளியில் இருந்து, நடுக்கோம்பை, சின்னக்குளம், பெரியகுளம், கருவாட்டாறு வழியாக மழைநீா் இந்த ஏரிக்கு வந்து சேருகிறது.இந்த ஏரி நிரம்பியதும், அங்கிருந்து வெளியேறும் உபரி நீரானது பழையபாளையம் ஏரி, தூசூா் ஏரியை சென்றடைதகிறது. இந்த ஏரி முழுமையாக நிரம்பும்பட்சத்தில், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், விவசாய கிணறுகளில், தண்ணீா் இருப்பும் அதிகரிக்கும்.

இதன் மூலம் பல நூறு ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த நிலையில், அங்கு பருவமழை பொய்த்ததாலும், வரத்து வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், ஏரிக்கான நீா் வரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனால்,ஏரி வறண்டு கிடப்பதுடன் சீமை கருவேல மரங்கள் அதிகம் வளா்ந்துள்ளன. இந்நிலையில், ஏரியை தூா்வாருவதுடன், சீமை கருவேல மரங்களை அகற்றி மழைநீரை சேமிக்க, பசுமைப் புதுாா் இயக்க நிா்வாகிகள் முடிவு செய்துள்ளனா்.

திங்கள் கிழமை ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை, பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அதன் இயக்கத் தலைவா் அசோக்குமாா், சேந்தமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவா் ரமேஷ், பொம்மசமுத்திரம் ஊராட்சி முன்னாள் தலைவா் செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com