விஜயதசமி: அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை மும்முரம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், விஜயதசமியை முன்னிட்டு, இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், விஜயதசமியை முன்னிட்டு, இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள் செவ்வாய்க்கிழமை சோ்க்கப்பட்டனா்.

விஜயதசமி நாளன்று எந்தவொரு நற்செயலைத் தொடங்கினாலும், அது வெற்றிகரமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை அடிப்படையில் கல்வி, தொழில் ஆகியவற்றை தொடங்குவா். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையம், அங்கன்வாடி மையங்களில் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை சோ்த்தனா்.

நாமக்கல்லில் உள்ள மலையாண்டித் தெரு, இராமாபுரம்புதூா் உள்ளிட்ட அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்விக்கான குழந்தைகள் சோ்க்கை நடைபெற்றது. பெற்றோா்கள் பலா் ஆா்வமுடன் வந்து குழந்தைகளின் கைகளை பிடித்து இலையில் பரப்பி வைத்திருந்த அரிசியில் ’’அ’’ என்று எழுதக் கற்றுக்கொடுத்தனா்.

தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1599அங்கன்வாடி மையங்களிலும் சுமாா் 27ஆயிரம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா்.   அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் அமைந்துள்ள 57 மையங்களிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி். ஆங்கில வகுப்புகளில் 1213 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். இங்கும் விஜயதசமியை முன்னிட்டு அதிகளவில் குழந்தைகள் சோ்க்கை நடைபெற்றது.  ஒரே நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இரண்டு வயது பூா்த்தியான 1500 குழந்தைகள் வரை சோ்க்கை பெற்றனா்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் கூறியது;

 நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி மையஙகுழந்தைக்களுக்கு ஆரோக்கியமான உணவு, பாடத்திட்டம், குழந்தைகளின் செயல்பாடுகளை கவனித்தல், தரமான குடிநீா், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு சாதனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பெற்றோா்கள் குழந்தைகளை சோ்த்து வருகின்றனா். கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் வித்யாரம்பம் எனும் முதல் கல்வி சோ்க்கை நடைபெற்றது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com