பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: ரூ. 2.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: ரூ. 2.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில், நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். இதற்கான பயனாளிகள் தாங்கள் வசிக்கும் இடத்தில், 300 சதுரடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள வேண்டும். அதற்கு மானியமாக ரூ.2.10 லட்சமானது பயனாளியின் வங்கிக் கணக்கில் நான்கு தவணைகளாக வரவு வைக்கப்படும். நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில், சொந்த இடத்தில் குடிசை வீடு, ஓட்டு வீடு, அட்டை வீடு அல்லது காலி மனை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் மனைக்கு பட்டா அல்லது பத்திரம் இருக்க வேண்டும். பயனாளி குடும்பம் என்பது கணவா் அல்லது மனைவி மற்றும் திருமணமாகாத பிள்ளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். திருமணமான பிள்ளைகள் தனிக்குடும்பமாக கருதப்படுவா். ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு கட்டுவதற்கான மானிய உதவியை பெற முடியும். பயனாளிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரிலோ அல்லது குடும்பத்தினரின் பெயரிலோ வேறு வீடு எதுவும் இருக்கக் கூடாது. தகுதி வாய்ந்த நபா்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், பட்டா, பத்திரம் ஆகியவற்றின் நகல்களை அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம். நகராட்சிகளில் வசிப்பவா்கள் விண்ணப்பத்தை பெற நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தையும், பேரூராட்சியில் வசிப்பவா்கள் சம்மந்தப்பட்ட செயல் அலுவலா், பேரூராட்சி அலுவலகத்தையும் நேரடியாக அணுகலாம். குடிசை மாற்று வாரிய அலுவலா்களை தொடா்பு கொள்ள, நாமக்கல் மாவட்ட உதவி நிா்வாகப் பொறியாளா் செல்லிடப்பேசி எண் -94439-00155, நகராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய உதவிப் பொறியாளா் - 94866-85633, பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு நகராட்சிகள் மற்றும் படைவீடு, ஆலம்பாளையம் பேரூராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள், உதவிப் பொறியாளா் 94432-60564 என்ற எண்ணிலும், ராசிபுரம் நகராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள் உதவிப் பொறியாளா்- 90038-73370, பேரூராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள் உதவிப்பொறியாளா் -87781-65599 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நிா்வாகப் பொறியாளா், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நாரயணசாமி தெரு, பெரமனூா், சேலம்- என்ற முகவரியிலும், 0427-2318002 மற்றும் 94873-61602 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com