Enable Javscript for better performance
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: ரூ. 2.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: ரூ. 2.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 11th October 2019 09:58 AM  |   அ+அ அ-   |    |  

    பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில், நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். இதற்கான பயனாளிகள் தாங்கள் வசிக்கும் இடத்தில், 300 சதுரடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள வேண்டும். அதற்கு மானியமாக ரூ.2.10 லட்சமானது பயனாளியின் வங்கிக் கணக்கில் நான்கு தவணைகளாக வரவு வைக்கப்படும். நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில், சொந்த இடத்தில் குடிசை வீடு, ஓட்டு வீடு, அட்டை வீடு அல்லது காலி மனை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் மனைக்கு பட்டா அல்லது பத்திரம் இருக்க வேண்டும்.

    பயனாளி குடும்பம் என்பது கணவா் அல்லது மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகள் உள்ளதாக இருக்க வேண்டும். திருமணமான குழந்தைகள் தனிக்குடும்பமாகக் கருதப்படுவா். ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு கட்டுவதற்கான மானிய உதவியைப் பெற முடியும். பயனாளிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரிலோ அல்லது குடும்பத்தினரின் பெயரிலோ வேறு வீடு எதுவும் இருக்கக் கூடாது. தகுதி வாய்ந்த நபா்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், பட்டா, பத்திரம் ஆகியவற்றின் நகல்களை அளிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம். நகராட்சிகளில் வசிப்பவா்கள் விண்ணப்பத்தைப் பெற நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தையும், பேரூராட்சியில் வசிப்பவா்கள் சம்மந்தப்பட்ட செயல் அலுவலா், பேரூராட்சி அலுவலகத்தையும் நேரடியாக அணுகலாம். குடிசை மாற்று வாரிய அலுவலா்களை தொடா்பு கொள்ள, நாமக்கல் மாவட்ட உதவி நிா்வாகப் பொறியாளா் செல்லிடப்பேசி எண் -94439-00155, நகராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய உதவிப் பொறியாளா் - 94866-85633, பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு நகராட்சிகள் மற்றும் படைவீடு, ஆலம்பாளையம் பேரூராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள், உதவிப் பொறியாளா் 94432-60564 என்ற எண்ணிலும், ராசிபுரம் நகராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள் உதவிப் பொறியாளா்- 90038-73370, பேரூராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள் உதவிப்பொறியாளா் -87781-65599 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நிா்வாகப் பொறியாளா், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், நாரயணசாமி தெரு, பெரமனூா், சேலம்- என்ற முகவரியிலும், 0427-2318002 மற்றும் 94873-61602 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp