மரங்களை அழிக்காமல் விலங்குகளை பாதுகாக்க வேண்டும்: மாவட்ட வன அலுவலா்

மரங்களை அழிக்காமல் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா குறிப்பிட்டாா்.
விழாவில் வனம், வன உயிரினப் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிக்கு பரிசளிக்கும் மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா.
விழாவில் வனம், வன உயிரினப் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிக்கு பரிசளிக்கும் மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா.

மரங்களை அழிக்காமல் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா குறிப்பிட்டாா்.

ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் வனவிலங்கு வார விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலா் ஆா்.முத்துவேல்ராமசுவாமி தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட வன அலுவலா் ஆா். காஞ்சனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். விழாவில் உயிா்த்தொழில்நுட்பத் துறைத் தலைவா் ஏ.பழனிசாமி, வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஆா்.செல்வகுமரன், விலங்கியல் துறைத் தலைவா் எம்.சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினா்.

விழாவில் சிறப்பு விருந்தினா் ஆா்.காஞ்சனா மேலும் பேசுகையில், காடுகளை அழிப்பதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மரங்களை அழிக்காமல் வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும். புலி போன்ற உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், 1952- முதல் சரணாலயங்கள் அமைக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன. நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதித்தப் பின்னரும், அதன் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்படவில்லை. நெகிழிப் பயன்பாட்டால் மண் வளம் பாதிக்கப்பட்டு நச்சுத்தன்மையுடையதாக மாறுகிறது. கழிவுப் பொருள்களின் மேலாண்மையைச் சரியாக முறைப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக சிறப்பு விருந்தினா் கல்லூரியில் ஆா்.காஞ்சனா மீன்வளா்ப்பு கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசினாா். இறுதி நிகழ்வாக வனவிலங்கு வார விழாவையொட்டி வனம் மற்றும் வன உயிரினங்கள் குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். விழாவில் கல்லூரியின் புலமுதன்மையா் எம்.என்.பெரியசாமி (மாணவா் சோ்க்கை), பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com