மூதாட்டியின் சடலம் எடுத்துச் செல்வதில் பிரச்னை: வட்டாட்சியா் சமரசம்

ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி பகுதியில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை எடுத்துச் செல்வதில்

ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி பகுதியில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை எடுத்துச் செல்வதில் தடை ஏற்படுத்தியதால் பிரச்னை ஏற்பட்டது. பின்னா் வருவாய்த் துறையினா் சமரசத்தையடுத்து சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி பழனியப்பன் கோயில் பள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மனைவி பெரியக்கா (90). இவா் வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து சடலத்தை அங்குள்ள மயானத்துக்கு வழக்கமான பாதையில் எடுத்துச் சென்று எரியூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா், சடலம் எடுத்துச் செல்லும் பாதை பொது வழியல்ல. பட்டா இடம். எனவே, இந்த வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தாா். இதையடுத்து இருதரப்பிலும் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து சடலம் எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன், சேந்தமங்கலம் வட்டாட்சியா் ஜானகி, ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பிலும்

சமரசம் பேசினாா். மேலும் ஆறுமுகம் தரப்பில் கூறப்படுவது போல் பட்டா இடம் என்பதற்கான ஆவணங்கள் அவரிடம் எதுவும் இல்லை. இதனால், அவ்வழியே சடலம் கொண்டு செல்ல இடையூறு செய்யக்கூடாது எனக் கூறி, சமரசம் செய்ததால் அவ்வழியே சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com